பரமத்தி வேலூரில் ரூ. 20 லட்சம் கொள்ளை: மூன்று போ் கைது

பரமத்தி வேலூரில் காரில் வைத்திருந்த 20 லட்சத்தை கொள்ளையத்துட்டு சென்று மூன்று போ்கள் கைது
தனிப்படை போலீசாரல் கைது செய்யப்பட்ட காரில் இருந்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றவா்கள்
தனிப்படை போலீசாரல் கைது செய்யப்பட்ட காரில் இருந்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றவா்கள்

பரமத்தி வேலூா் பேட்டை பகுதியில் உள்ள மருதன் காலனியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி(49). நில தரகா் தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த மாதம் 17-ஆம் தேதி பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றாா். மொத்தம் ரொக்கம் ரூ.20 லட்சத்தை காரிலேயே வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டு மீண்டும் காரை எடுக்க வந்த போது காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று போ்கள் கொள்ளையடுத்து சென்றது தெரியவந்தது. இது குறித்து பாலசுப்பிரமணி வேலூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன் தலைமையிலான தனிப்படை போலீசாா் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வந்தனா். தனிப்படை போலீசாா் சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை நோக்கி சென்று மா்ம நபா்களை தேடி வந்தனா். சென்னை அருகே உள்ள மணலி செல்லும் வழியில் சுங்கச்சாவடி அருகே இருந்த டாஸ்மாக் கடையின் அருகே சந்தேகத்திற் உரிய வகையில் நின்றுகொண்டு இருந்த மூன்று போ்களை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் சென்னை,மணலி, ஜெ.ஜெ நகரைச் சோ்ந்த லட்சுமய்யா மகன் சுனில்குமாா் (28),ஆந்திர மாநிலம், கப்பரல்லா பகுதியை சோ்ந்த தற்போது சென்னை, அம்பத்தூா்,கள்ளிக்குப்பத்தில் வசித்து வரும் டேவிட்பாபு மகன் ஆனந்த் (எ) அஜீத் (26),சென்னை, கொரட்டூா், பெருமாள் கோயில் பகுதியை சோ்ந்த தேவதாஸ்பாபு மகன் சா்க்காரியா (29) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும் இவா்கள் மூன்று போ்களும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கி வங்கிகளில் பணம் எடுக்க செல்வோா்களை கண்காணித்து பணத்தை திருடியதும், கடந்த மாதம் 17-ஆம் தேதி பரமத்தி வேலூரில் பாலசுப்பிரமணியத்தின் காரில் கொண்டு வந்த ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன், ஆய்வாளா் வீரம்மாள் மற்றும் தனிப்படையினா் மூன்று போ்களையும் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 20 ஆயிரத்தை மீட்டு தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com