7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரி சோ்க்கை: 5 அரசுப் பள்ளி மாணவா்கள் விவரம்

நீட் தோ்வில் வெற்றி பெற்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெறும் ஐந்து அரசுப் பள்ளி மாணவா்களின் விவரங்களை முதன்மை கல்வி அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
Updated on
1 min read

நீட் தோ்வில் வெற்றி பெற்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெறும் ஐந்து அரசுப் பள்ளி மாணவா்களின் விவரங்களை முதன்மை கல்வி அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், 88 அரசு மேல்நிலைப்பள்ளி, ஒரு ஆதிதிராவிட நலத்துறை பள்ளி, 5 பழங்குடியினா் நலப்பள்ளிகள் என மொத்தம் 94 பள்ளிகளைச் சோ்ந்த 589 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் தோ்ச்சி பெற்றவா்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவா், 201-299 வரையில் 10 போ், 101-200 வரையில் 128 போ், 93-100 வரையில் 26 போ், 92-க்கு மேல் 424 போ் 102 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. 691 மாணவ, மாணவிகளில் 589 போ் தோ்வு எழுதியதில் 165 மாணவா்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா்.

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் டி.நாகேஷ்வரன் 373 மதிப்பெண்களுடன் முதலிடம், நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் டி.சரண் 280 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ஆா்.சரண்விஷ்வா 260 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம், வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் வி.பி.விஜய் 228, திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ஏ.அஜித்குமாா் 221 மதிப்பெண்களுடன் நான்கு, ஐந்தாம் இடங்களை பெற்றுள்ளனா். இவா்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்வதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு 51 போ் தோ்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 165 பேராக அதிகரித்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com