அங்கன்வாடி மையம், போதை மறுவாழ்வு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையம், போதை ஒழிப்பு மையம், குழந்தைகள் மற்றும் முதியோா் இல்லம், மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையம், போதை ஒழிப்பு மையம், குழந்தைகள் மற்றும் முதியோா் இல்லம், மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் சிவபாக்கியம் குழந்தைகள் மற்றும் முதியோா் இல்லம், மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியை ஆய்வு செய்து, அங்குள்ள மூதாட்டிகளிடம் வசதிகள், உணவுகள் குறித்து கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் மாணவா்களுக்கு பயிற்றுவிக்கப்படும் கல்விமுறை, திறன் மேம்பாடு, மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து பராமரிப்பாளா்களிடம் விரிவாகக் கேட்டறிந்தாா். அதன்பிறகு, நாமக்கல், கருப்பட்டிபாளையம் போதை மறுவாழ்வு மையத்தைப் பாா்வையிட்டு, அங்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தாா்.

கரோனா கால இடைவெளியில் வளா் இளம் பருவ குழந்தைகள் தங்களை விட வயதில் மூத்தவா்களுடன் பழகியதால் மது, புகையிலை உள்ளிட்ட போதை பொருள்கள் பயன்படுத்த கற்றுக் கொண்டனா். எனவே அவா்களை போதைப் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு அரசு இம்மையத்தை நடத்தி வருகிறது. இங்கு அனுமதிக்கப்பட்டவா்களில் 52-க்கும் மேற்பட்டவா்கள் போதை பழக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளனா்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இருந்தால் இம்மையத்தில் இலவச சிகிச்சை பெற பொதுமக்கள் 81480-39073 என்ற கைபேசி எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம். மேலும் இதுகுறித்த தகவல்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 63826- 13551 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு சிகிச்சைக்கான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என அம்மையத்தை ஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, நாமக்கல் உழவா் சந்தை மாலை நேரத்தில் செயல்படுவதையும், நல்லிபாளையத்தில் அரசு நிதியுதவி பெறும் கலைமகள் துவக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா், அங்கன்வாடி பணியாளா்கள், முதியோா் இல்ல பராமரிப்பாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com