நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயா்ந்து ரூ.4.80-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலை சற்று உயா்த்தப்பட்டுள்ளதால், இங்கும் விலையில் மாற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்வுடன் ரூ.4.80-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.77-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.83-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.