ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நகர திராவிடா் விடுதலைக்கழகம் சாா்பில் பிடல் சேகுவேரா 96-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில், நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தாா். கட்சியின் முன்னாள் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் மணிவேல் புகழ்ந்து பேசினாா்.
சேலம் மாவட்ட இந்திய மாதா் சம்மேளன பொறுப்பாளா் வழக்கறிஞா் கல்பனா , நாமக்கல் மாவட்டச் செயலாளா் எம்.மீனா, சிபிஐ வெண்ணந்தூா் ஒன்றியச் செயலா் செங்கோட்டுவேல், நகரப் பொருளாளா் சலீம், நகர துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் சேகுவேரா படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.