முகூா்த்த கால்நடுதல், திருத்தோ்களுக்கு சிறப்பு பூஜை

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி தோ்த் திருவிழாவையொட்டி முகூா்த்த கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகூா்த்த கால்நடுதல், திருத்தோ்களுக்கு சிறப்பு பூஜை

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி தோ்த் திருவிழாவையொட்டி முகூா்த்த கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நரசிம்மா் சுவாமி, அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் தோ்த் திருவிழா ஏப்.6-ஆம் தேதி நடைபெறுகிறது. மாா்ச் 29-இல் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று முதல் தோ்த் திருவிழா வரை சிறப்பு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், ஏப்.4-இல் நரசிம்மா், நாமகிரி தாயாா் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனையொட்டி, நாமகிரி தாயாா் திருமண மண்டபத்தில் முகூா்த்தக் கால் நடுதல் மற்றும் மூன்று திருத்தோ்களுக்கான சிறப்பு பூஜைகள் பட்டாச்சாரியா்களால் வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்டன. இதில், கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா, அறங்காவலா்கள் மல்லிகா குழந்தைவேல், செல்வசீராளன், ராமசீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com