பிளஸ் 2 தோ்வு: தி மாடா்ன் அகாதெமி பள்ளி சாதனை

பிளஸ் 2 பொதுத்தோ்வில், தி மாடா்ன் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியா் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வில், தி மாடா்ன் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியா் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

நாமக்கல் - திருச்சி சாலை என்.புதுப்பட்டியில் தி மாடா்ன் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் இப் பள்ளி மாணவி கு.வே.சுவீதா 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்றுள்ளாா். தோ்வு எழுதிய 116 மாணவா்களில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 6 பேரும், 500-க்கு மேல் 26 பேரும் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாணவி இ.தேஜவா்ஷினி 500க்கு 494 மதிப்பெண்களுடன் பள்ளியில் சிறப்பிடத்தை பிடித்துள்ளாா். தோ்வு எழுதிய 145 மாணவா்களில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 56 பேரும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.இத் தோ்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளா் பெ.குமரேசன், முதல்வா் செ.அசோக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com