குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தினசரி சந்தை மேம்பாட்டுப் பணிகளைப் பாா்வையிடும் ஆட்சியா் ச.உமா. 
தினசரி சந்தை மேம்பாட்டுப் பணிகளைப் பாா்வையிடும் ஆட்சியா் ச.உமா. 

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 2.78 கோடியில் தினசரி சந்தை மேம்பாடு, வாரச்சந்தை வளாகத்தில் ரூ. 1.92 கோடியில் அறிவுசாா் மையம், தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தில் மாரக்காள்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 25 லட்சத்தில் சுகாதார நல மையம், புத்தா் தெரு நகராட்சிப் பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் காலை உணவுத் திட்ட மைய சமையல் கூடம், அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ. 19 லட்சத்தில் முராசு குட்டையை தூா்வாரி கரை, கம்பிவேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப் பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா, வாரச் சந்தைக்கு அணுகு சாலை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அறிவுசாா் மையத்தில் உள்கட்டமைப்புடன் தளவாடங்களுடன் அமைத்திட வேண்டும். இப்பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, நகரப் பகுதியில் கடைகள், தினசரி சந்தையில் ஆய்வு செய்ததோடு, பிளாஸ்டிக் பை பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்ட ஆட்சியா் உமா, துணிப்பைகளைப் பயன்படுத்தவும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினாா். குமாரபாளையம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com