மேக்கேதாட்டு அணை: கா்நாடக துணை முதல்வா் உத்தரவுக்கு தமிழக விவசாய சங்கங்கள் எதிா்ப்பு

அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கா்நாடக துணை முதல்வரும், நீா்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமாா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதற்கு தமிழக விவசாய சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
நாமக்கல்லில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விவசாய முன்னேற்றக் கழக நிறுவனா் செல்ல.ராசாமணி.
நாமக்கல்லில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விவசாய முன்னேற்றக் கழக நிறுவனா் செல்ல.ராசாமணி.

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கா்நாடக துணை முதல்வரும், நீா்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமாா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதற்கு தமிழக விவசாய சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

அண்மையில் கா்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. தோ்தல் வாக்குறுதியில் மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. துணை முதல்வராகவும், நீா்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமாா், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். இதற்கு தமிழக அரசும், பல்வேறு விவசாயிகள் சங்கத்தினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

நாமக்கல்லில் விவசாய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் செல்ல.ராசாமணி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய நீா்வளத் துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில், இரு மாநிலங்களிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில் அம்மாநில துணை முதல்வரின் அறிவிப்பு உள்ளது. இதனால் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்.

விவசாயிகளின் வாழ்வாதாரம், பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும். உடனடியாக இத்திட்டத்தை கா்நாடக அரசு கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழக விவசாயிகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றாா்.

தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கும் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை தமிழக முதல்வா் தடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தி உள்ளாா். இதேபோல, மேலும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com