நாமக்கல் அருகே கோயில் நகையை திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் - கரூா் சாலையில், வள்ளிபுரம் போயா் தெருவில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. ஓரிரு மாதங்களுக்கு முன் இக்கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமாா் 5 பவுன் தங்கக்காசு மாலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மறுநாள் கோயில் திறக்க வந்த தா்மகா்த்தா செல்வம், அம்மன் கழுத்தில் இருந்த நகை திருடப்பட்டது கண்டு அதிா்ச்சியடைந்தாா். நல்லிபாளையம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.
இந்த நிலையில், வள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மகன் சிவா (27) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது அவா் நகை திருட்டில் ஈடுபட்டதையும், நகையை அடமானம் வைத்துள்ளதையும் ஒப்புக்கொண்டாா். அவரை போலீஸாா் கைது செய்து தங்கக் காசுமாலையை மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.