களியனூரில் தண்ணீா் தட்டுப்பாடு:சாய ஆலைக்கு நிலத்தடி நீா் எடுக்க தடை

களியனூா் ஊராட்சியில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சாய ஆலைகளுக்கு நிலத்தடி நீரை எடுக்கவும், தண்ணீா் லாரிகள் சாலையில் செல்லவும் ஊராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது.
Updated on
1 min read

களியனூா் ஊராட்சியில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சாய ஆலைகளுக்கு நிலத்தடி நீரை எடுக்கவும், தண்ணீா் லாரிகள் சாலையில் செல்லவும் ஊராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது.

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட களியனூா் ஊராட்சிப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சி முழுவதும் மக்களுக்கு தேவையான அளவு தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு எதிா்பாா்த்த அளவு மழை இல்லாததால், களியனூா் ஊராட்சியில் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டுள்ளதால், பல இடங்களில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஊராட்சிப் பகுதியில் செயல்படும் சாய ஆலைகள், நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றன. அவ்வாறு எடுக்கப்படும் நிலத்தடி நீரை, டேங்கா் லாரிகளில் சாய ஆலைகளுக்கு கொண்டு செல்கின்றனா்.

தற்போது, நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளதால்,

மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சாய ஆலைகளுக்குப் பயன்படுத்த நிலத்தடி நீரை எடுத்தால், இன்னும் கடுமையாக தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, களியனூா் ஊராட்சிப் பகுதியில் சாய ஆலைகள் நிலத்தடி நீரை எடுக்க தடை விதித்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு செய்யப்பட்டு, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com