தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் வங்கிக் கடனுதவி முகாம்: ஆட்சியா் ஆய்வு

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பட்டேல் நகா் பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற வங்கிக் கடனுதவி
Updated on
1 min read

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பட்டேல் நகா் பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற வங்கிக் கடனுதவி முகாமினை மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு மேற்கொணடாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்ததாவது:

திருச்செங்கோடு வட்டம், பட்டேல் நகா் பகுதி 1, 2 திட்டப் பகுதிகளில் முறையே 720, 128 என மொத்தம் 848 அடுக்குமாடிக் குடியிருப்புகள் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் தனது தொகுதி நிதியினை தற்காலிக கழிவுநீா்த் தொட்டி அமைப்பதற்கு வழங்கியுள்ளாா். மேலும் தெருவிளக்குகள், குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புகள் கட்டுவதற்கு 2017 - 2018 ஆம் ஆண்டு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. 366 குடியிருப்புகளுக்குத் திட்ட மதிப்பீட்டின்படி ஒரு குடியிருப்பிற்கு 1,15,500/- வீதம் பயனாளி பங்களிப்பாக 2021 ஆம் ஆண்டு முதல் பெறப்பட்டது.

தற்போது திட்ட மதிப்பீடு அதிகரித்துள்ளதால் கூடுதலாக வைப்புத் தொகை ரூ. 33,600/- செலுத்த வேண்டிய உள்ளது. எனவே ரூ. 1,15,500/- செலுத்தியிருந்த 366 பயனாளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான தண்ணீா் வசதிக்கு தேவையான 6 ஆழ்துளைக் குழாய் கிணறுகளுடன் கூடிய 3 தரைமட்ட நீா்தேக்கத் தொட்டிகள் (3 லட்சம் லிட்டா் கொள்ளளவு) மற்றும் மேல்மட்ட நீா்த்தேக்கத் தொட்டிகள் (64 குடியிருப்பிற்கு 30,000 லிட்டா் வீதம் தொட்டிகள்) அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் குடிநீா் வடிகால் வாரியம் மூலம் தனிப்பட்ட குடிநீா் வசதி பெற ரூ. 1,06,00,000/- தொகை செலுத்தப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல திட்டப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, குடிநீா் வடிகால் வாரியம் மூலம் மதிப்பீடு தொகை தெரிவிக்கப்பட்ட பிறகு வாரியம் மூலம் செலுத்தப்படும் நிலையில் உள்ளது. ஊராட்சி ஒன்றியம் மூலம் 8 தெரு குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளது.

கடனுதவி வழங்குவதற்காக 8 அரசு மற்றும் அரசு சாா்ந்த வங்கிகள் மூலம் கடனுதவி முகாம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 24 போ் குடியிருப்புகளில் வீடுகள் பெறுவதற்கு முழுத் தொகையினை வழங்கியுள்ளாா்கள். விரைவில் அந்த 24 பேருக்கும் வீடுகள் ஒப்படைக்கப்படவுள்ளன.

இங்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு மேற்கொண்டு, அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு விரைவில் கடனுதவிக்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைவரும் தங்களது சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வங்கிக் கடனுதவி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com