தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நிதியுதவி
By DIN | Published On : 17th April 2023 02:27 AM | Last Updated : 17th April 2023 02:27 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் வீட்டில் தீப்பிடித்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு நகராட்சி தலைவா் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவியை வழங்கினாா்.
பள்ளிபாளையம் இ.ஆா் திரையரங்கம் இருக்கும் பகுதியைச் சோ்ந்த கோபால் (45) விசைத்ததறி ஓட்டும் வேலை செய்து வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை காலை இவரது வீட்டில் தீடீரென தீப்பிடித்தது. பக்கத்து வீட்டுக்காரா்களும், பொதுமக்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இருந்தும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்த சாம்பலாயின. மேலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கோபாலின் மகளது புத்தகங்களும் தீயில் எரிந்தன. தகவலறிந்த பள்ளிபாளையம் நகராட்சித் தலைவா் செல்வராஜ் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினாா்.
தற்போது தோ்வு நடந்து வருவதால், கோபாலின் மகளுக்கு புதிய புத்தகங்களை வழங்குமாறு, பள்ளிபாளையம் அரசு மகளிா் தலைமையாசிரியரிடம் கேட்டுக்கொண்டாா்.