மக்கள் குறைதீா் கூட்டத்தில் 287 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 18th April 2023 05:28 AM | Last Updated : 18th April 2023 05:28 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 287 மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவா் உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், உதவி ஆணையா் (கலால்) செல்வி உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.