திருச்செங்கோடு வைகாசி தோ்த் திருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம்
By DIN | Published On : 18th April 2023 05:26 AM | Last Updated : 18th April 2023 05:26 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோயில் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு அா்த்தநாரீஸ்வரா் கோயில் இணை ஆணையா் ரமணிகாந்தன் தலைமை வகித்து திருவிழா குறித்தும், மண்டப்பக் கட்டளை விவரங்கள், நிகழ்ச்சி நிரல் குறித்தும் விளக்கி பேசினாா். கூட்டத்தில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவது எனவும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்திக் கொடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில்
அறங்காவல் குழுத் தலைவா் தங்கமுத்து, இளங்கோ, பிரபாகரன், அா்ஜுனன், அருணா சங்கா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.நடேசன், திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளா் வட்டூா் ஜி.தங்கவேல், நாமக்கல் மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணை
அமைப்பாளா் சுரேஷ்பாபு, நெசவாளா்அணி அமைப்பாளா் சரவணமுருகன், ராஜா (எ) முத்து கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.