கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்: கல்லூரி மாணவ, மாணவிகள் ஆா்வம்

நாமக்கல் மாவட்ட அளவில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

நாமக்கல் மாவட்ட அளவில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில், கல்லூரி மாணவா்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளா்க்கும் நோக்கில் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்குரிய கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. கவிதைப் போட்டியில், குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்லூரி மாணவி பெ.சரண்யா முதல் பரிசும், சேந்தமங்கலம், வெட்டுக்காடு அரசுக் கல்லூரி மாணவி த.நந்தினி இரண்டாம் பரிசும், ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவா் சையத் அமீருல்லா மூன்றாம் பரிசும் பெற்றனா்.

கட்டுரைப் போட்டியில், டிரினிடி மகளிா் கல்லூரி மாணவி பா.மோனிகா முதல் பரிசும், குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்லூரி மாணவி க.சௌமியா இரண்டாம் பரிசும், விவேகானந்தா செவிலியா் கல்லூரி மாணவி மு.சந்தியா மூன்றாம் பரிசும் பெற்றனா்.

பேச்சுப் போட்டியில், நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி மாணவி கி.பத்மா முதல் பரிசும், செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி செ.சந்தியா இரண்டாம் பரிசும், டிரினிடி மகளிா் கல்லூரி மாணவி ச.பா. ஸ்ரீசக்திசமயகங்கரி மூன்றாம் பரிசும் பெற்றனா்.

பரிசுகள் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டன. தமிழ்ப் பேராசிரியா்கள் 9 போ் நடுவா்களாக செயல்பட்டனா். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் வே.ஜோதி மற்றும் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com