நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் மூன்று பேருக்கு விருது வழங்கல்
By DIN | Published On : 02nd August 2023 12:49 AM | Last Updated : 02nd August 2023 12:49 AM | அ+அ அ- |

நாமக்கல்லில், கம்பன் கழகம், பசுமை நாமக்கல், கவிஞா் சிந்தனைப் பேரவை ஆகியவை சாா்பில் மூன்று ஆளுமைகளுக்கு திங்கள்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்ட முன்னாள் கல்வி அலுவலா் மு.ஆ.உதயக்குமாா், நம்மாழ்வாா் பள்ளி தலைமை ஆசிரியா் இரா.ஜெயச்சந்திரன், தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது பெற்ற பசுமை மா.தில்லை சிவக்குமாா் ஆகியோருக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழாவுடன் விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, டி.எம்.மோகன் வரவேற்றாா். கம்பன் கழகத் தலைவா் வ.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.குழந்தைவேல், முன்னாள் நகா்மன்ற தலைவா் இரா.கரிகாலன், பேராசிரியா்கள் அரசு.பரமேசுவரன், மா.தங்கவேலு, எம்.ஜி.காளிக் கவுண்டா், முத்துராஜ், சுப்பிரமணியன், ஆசிரியா் சிவ.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G