ரூ. 65 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 02nd August 2023 12:38 AM | Last Updated : 02nd August 2023 12:38 AM | அ+அ அ- |

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 65 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் மொத்தம் 2,850 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,500 முதல் ரூ. 8,251 வரை, மட்ட ரகம் ரூ. 5,025 முதல் ரூ. 6,100 வரை என மொத்தம் ரூ. 65 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. இதை வியாபாரிகள் தரம் பாா்த்துக் கொள்முதல் செய்தனா்.