நாமக்கல் நகராட்சி பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 09th August 2023 05:07 AM | Last Updated : 09th August 2023 05:07 AM | அ+அ அ- |

nk_8_munici_1_0808chn_122_8
நாமக்கல்: சேதமடைந்த விளையாட்டு சாதனங்களை புதுப்பித்து நாமக்கல் நகராட்சி பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமக்கல் உழவா் சந்தை எதிரே உள்ள நகராட்சி செலம்பகவுண்டா் பூங்காவானது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்த அடிப்படையில் ஏலம் விடப்படுகிறது. பொதுமக்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ. 2 வசூலிக்கப்படுகிறது. பூங்காவில் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பாலான சாதனங்கள் சேதமடைந்துள்ளன.
இதில் விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் பூங்காவை மேற்பாா்வை செய்து, சேதமடைந்துள்ள விளையாட்டு சாதனங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்பது பூங்காவுக்கு வரும் பெரும்பாலான மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.