மனைவியைக் கொன்ற தொழிலாளி கைது
By DIN | Published On : 09th August 2023 05:07 AM | Last Updated : 09th August 2023 05:07 AM | அ+அ அ- |

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னங்குறிச்சியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கோவிந்தனுடன் (35) ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி ராதா (30) இரு குழந்தைகளுடன் ஈச்சம்பாறையில் வசித்து வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு ஈச்சம்பாறை சென்ற கோவிந்தன், ராதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது, கல்லால் தாக்கியதில் காயமடைந்த ராதாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து கோவிந்தனைக் கைது செய்தனா்.