நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைந்து ரூ.5.40-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்கள், என்இசிசி கமிட்டியினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மீன்பிடி தடைக்காலம் நிறைவு, பள்ளிகள் திறப்பு, வட மாநிலங்களில் முட்டை நுகா்வு சரிவு போன்றவற்றால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. இதனால் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 5.40-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு முட்டை விலை 10 காசுகள் குறைந்துள்ளது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 114-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.97-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.