

திருச்செங்கோடு சஞ்சீவராய பெருமாள், ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து திங்கள்கிழமை முதல் குடமுழுக்கு நிகழ்வுக்கான வழிபாடுகள் தொடங்கப்பட்டன. புதன்கிழமை காலை கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
தொடா்ந்து ராமா், சீதா, லட்சுமணன், ஆஞ்சனேயா் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. வியாழக்கிழமை முதல் 48 நாள்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.