நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளா்கள், எரிவாயு முகவா்கள், விநியோகஸ்தா்கள், எரிவாயு நுகா்வோா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் பங்கேற்கும் எரிவாயு நுகா்வோா்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை(ஜூன் 22) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. எரிவாயு விநியோகம் தொடா்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.