பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் வைகாசி பட்டத்துக்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு பருவத்துக்கு விதைப்பு செய்ய ஏற்ற நிலக்கடலை ரகங்கள் டி.எம்.வி14, கதிரிலப்பாக்ஸி 1812, பி.எஸ்.ஆா் 2, உளுந்து விதைகள் வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10, சோள விதைகள்- கோ-32, கே-12 ஆகிய சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விதைகள் தேவைப்படும் விவசாயிகள் பரமத்தி வட்டார வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கி பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.