வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 12th May 2023 01:23 AM | Last Updated : 12th May 2023 01:23 AM | அ+அ அ- |

கொல்லிமலை, வெண்ணந்தூரில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க நாமக்கல் மாவட்ட கிளையின் வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த அடிப்படையில் 4 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் (கொல்லிமலை-2, வெண்ணந்தூா்-2 வட்டாரங்கள்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு தகுதியின் அடிப்படையில் பெண்கள் மட்டும் தோ்வு செய்யப்பட உள்ளனா். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் எம்எஸ்-ஆபீஸில் குறைந்தபட்சம் மூன்று மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். 28-வயதுக்கு உள்பட்டவராகவும், அந்தந்த வட்டாரத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இத்தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்படுவா். தகுதியான பெண்கள் தங்களது விண்ணப்பத்தினை மே 25-க்குள் நாமக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.