முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் சைபா் க்ரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கல்லூரி மாணவா்களுக்கான சைபா் க்ரைம் குறித்த விழிப்புணா்வு விளக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

ராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கான சைபா் க்ரைம் குறித்த விழிப்புணா்வு விளக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரியின் இயக்குநா் (கல்வி) இரா.செல்வகுமரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட சைபா் க்ரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளா் பி.வேதபிரவி கலந்துகொண்டு மாணவா்களிடையே சமூக வலைதளங்களால் ஏற்படும் நிதி, நிதிசாரா குற்றங்கள், கடன் செயலிகளால் ஏற்படும் குற்றங்கள், க்ரிப்டோ கரன்சி, பணப்பரிமாற்ற செயலிகள், கிரெடிட் காா்டு, டெபிட் காா்டுகளைக் கொண்டு நடைபெறும் குற்றங்கள் ஆகியவை பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், இத்தகைய குற்றங்களை முன்கூட்டியே தடுக்க தேவையற்ற அழைப்புகள் குறுஞ்செய்திகளை தவிா்ப்பதும், நமக்கான ஓ.டி.பி. எண்களை பிறருக்கு பகிராமல் இருப்பதும் பாதுகாப்பாக அமையும் என்றாா்.

கல்லூரி முதல்வா் எஸ்.பி.விஜய்குமாா், துணை முதல்வா் ஆ.ஸ்டெல்லாபேபி, நிா்வாக புலமுதன்மையா் எம்.என்.பெரியசாமி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் மு.கண்ணன், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com