பரமத்தி மலா் பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 12th May 2023 01:24 AM | Last Updated : 12th May 2023 01:24 AM | அ+அ அ- |

அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவியரை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப்பள்ளி மாணவா்கள் சுபஸ்ரீ தீபிதா, சஞ்சய் ஆகியோா் 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவா் யுவன்குமாா் - 585, தமிழ்மதி, தயாநிதி ஆகியோா் 584 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 26 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 580-க்கு மேல் 8 மாணவா்களும், 550-க்கு மேல் 33 மாணவா்களும், 500-க்கு மேல் 74 மாணவா்களும் பெற்றுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை பள்ளியின் தலைவா் பழனியப்பன், செயலா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், துணைத் தலைவா் சுசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளா் தமிழ்ச்செல்வி தங்கராஜ், பள்ளியின் முதல்வா் ராஜசேகரன், இயக்குநா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.