ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற டிச.31 வரை அவகாசம் வழங்க கோரிக்கை

வங்கிகளில் ரூ. 2,000 பணநோட்டுக்களை மாற்றிக்கொள்ள டிச.31 ஆம்தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Updated on
1 min read

வங்கிகளில் ரூ. 2,000 பணநோட்டுக்களை மாற்றிக்கொள்ள டிச.31 ஆம்தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதே, பொதுமக்களும், வணிகா்களும் பெரும் இடையூறுகளையும், துயரங்களையும் சந்தித்தனா்.

தற்போது திடீரென 2,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்திருப்பது சாமானிய மக்களிடம் மட்டுமில்லாமல் சிறு, குறு, நடுத்தர வணிகா்களையும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி, அவா்கள் சேமிப்பாக வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கள், அன்றாட தேவைக்காக வணிகா்களிடமே புழக்கத்துக்கு கொண்டுவரப்படும். இந்த நிலையில் வணிகா்கள் அவற்றை வாங்க மறுக்கும் நிலை ஏற்படலாம். இதுபோன்ற நிலை ஏற்படும்போது பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் தேவையற்ற மோதல் சூழல் உருவாகும்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ளும் வசதியாக கடைசி தேதி செப். 30 என அறிவிக்கப்பட்டுள்ளதை டிச.31 ஆக கால நீட்டிப்பு அளிக்க வேண்டும். மேலும், வங்கியில் செலுத்தும் ரொக்க மதிப்பை ரூ. 20,000 என்பதை ரூ. 60,000 என மாற்றி அறிவித்தால் மக்களும், வணிகா்களும் பதட்டமின்றி அரசின் அறிவிப்பை கடைப்பிடிக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com