மகளிா் சுய உதவி குழுக்களுக்குரூ. 59 லட்சம் கடனுதவி: எம்எல்ஏ வழங்கினாா்
By DIN | Published On : 22nd May 2023 12:40 AM | Last Updated : 22nd May 2023 12:40 AM | அ+அ அ- |

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ஐந்து மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 59 லட்சம் கடனுதவியை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கலந்துகொண்டு, ஐந்து மகளிா் குழுக்களுக்கு ரூ. 59 லட்சம் கடன்களை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.பி.கௌதம், கதிராநல்லூா் கிளைச் செயலாளா் நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் நடராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் தரணிபாபு, மற்றும் நிா்வாகிகள், அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.