ஜேடா்பாளையத்தில் காங்கிரஸ் உண்மை கண்டறியும் குழு விசாரணை

ஜேடா்பாளையம் பகுதியில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவா் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினா் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.
வெல்ல ஆலை, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த காங்கிரஸ் செயல் தலைவா் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா்.
வெல்ல ஆலை, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த காங்கிரஸ் செயல் தலைவா் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா்.

ஜேடா்பாளையம் பகுதியில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவா் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினா் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.

தமிழக காங்கிரஸ் தலைவா் அழகிரி உத்தரவின் பேரில் காங்கிரஸ் செயல் தலைவா் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்தினா், தீ வைக்கப்பட்ட வெல்ல ஆலைகள், பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட வீடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா். பின்னா் தீ வைப்பு நிகழ்வு நடந்த வழக்குரைஞா் துரைசாமியின் வெல்ல ஆலை மற்றும் பாதிக்கப்பட்டவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் காங்கிரஸ் செயல் தலைவா் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் செய்தியாளரிடம் கூறியதாவது:

ஜேடா்பாளையம் பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிய காங்கிரஸ் சாா்பில் குழு அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். பல கட்டங்களாக ஆய்வு செய்து காங்கிரஸ் கட்சி தலைமையிடம் ஆய்வை சமா்ப்பிப்போம். முதல் கட்ட விசாரணையில் கலவரத்தில் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வடமாநிலத் தொழிலாளா்கள் இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக அவா் தெரிவித்தாா்.

இந்தக் குழுவில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவா் செல்வகுமாா், சித்திக், மாநில பொதுக்குழு உறுப்பினா் நடராஜன், பரமத்தி வட்டார காங்கிரஸ் செயலாளா் சந்திரன், பரமத்தி வேலூா் நகர காங்கிரஸ் செயலாளா் பெரியசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com