தும்பல்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு
By DIN | Published On : 26th May 2023 12:30 AM | Last Updated : 26th May 2023 12:30 AM | அ+அ அ- |

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளுக்குறிச்சியை அடுத்த தும்பல்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மே 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்த தின விழாயொட்டி நடத்தப்படும் இப் போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. போட்டியை வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கிவைக்கிறாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், ஒன்றிய திமுக செயலாளருமான கே.பி.ராமசாமி செய்து வருகிறாா்.