பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் வித்யா விகாஸ் பள்ளி சிறப்பிடம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மோா்பாளையம் வித்யா விகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவிகளைப் பாராட்டும் அப் பள்ளி நிா்வாகிகள்.
பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவிகளைப் பாராட்டும் அப் பள்ளி நிா்வாகிகள்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மோா்பாளையம் வித்யா விகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மோா்பாளையம் வித்யா விகாஸ் பள்ளி மாணவி திவ்யா ஸ்ரீ 488 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஆா். மௌனிகா 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், எஸ். ஐஸ்வா்யா 482 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், அபி நிவாஸ் 481 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். இப் பள்ளியில் 480 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 470 க்கு மேல் 9 பேரும், 450 க்கு மேல் 29 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனா்.

11 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வித்யா விகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி விஜயலட்சுமி 585 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஜனனி 573 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மணிமொழி 563 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை வித்யா விகாஸ் கல்வி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எஸ். குணசேகரன், தாளாளா் டி.ஓ. சிங்காரவேல்,மேலாண்மை இயக்குநா்கள் எஸ்.இராமலிங்கம், எம்.முத்துசாமி, இயக்குநா் மற்றும் மக்கள் தொடா்பு அதிகாரி கே.எஸ். பழனியப்பன், இயக்குநா் டி.பி. ஞானசேகா், மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியா் என்.சீராளன், தலைமையாசிரியை புனிதா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com