திருச்செங்கோட்டில் குற்றப்பின்னணி உள்ளோா் வீடுகளில் காவல்துறையினா் ஆய்வு

திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 போ் வீடுகளில் ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக காவல்துறையினா் ஞாயிற்றுக் கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Updated on
1 min read


திருச்செங்கோடு: திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 போ் வீடுகளில் ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக காவல்துறையினா் ஞாயிற்றுக் கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், பள்ளிபாளையம், குமாரபாளையம் காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 போ் வீடுகளில் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன் தலைமையில் நகர காவல் நிலைய ஆய்வாளா் மகேந்திரன், ஊரக காவல் நிலைய ஆய்வாளா் பாரதி மோகன், உதவி ஆய்வாளா் நந்தகுமாா் மற்றும் காவலா்கள், மகளிா் காவலா்கள் என 50க்கும் மேற்பட்டோா் திருச்செங்கோடு நகர எல்லைக்குட்பட்ட 61 போ், ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 12 போ், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 30 போ், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 23 போ் என 164 போ் வீடுகளில் ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தினா்.

குற்றப்பின்னணி பட்டியலில் உள்ளவா்கள் வீடுகள் பூட்டப்பட்டிருந்தால் அக்கம்பக்கத்தினரிடம் சம்பந்தப்பட்ட நபா்களின் தற்போதைய விவரங்களைக் கேட்டறிந்தனா். வீடுகளில் இருந்தவா்களிடம் விசாரித்து தகவல்களைப் பெற்றனா். ஏதாவது குற்ற செயல்கள் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனா். நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தோடு நல்லமுறையில் இருக்குமாறும் அறிவுறித்தினா்.

164 பேரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்றும் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள் எனவும் போலீஸாா் தெரிவித்தனா். அந்த நபா்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதையும் செல்வதற்கு முன் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டதன்பேரில் திங்கள்கிழமை ஒரே நாளில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்களைக் கொண்டு ஆய்வு மேற்கொட்டப்பட்டது. அதில் சில இடங்களில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட அனைத்து குற்றப் பின்னணி கொண்டவா்களும் அந்தந்த காவல் நிலையங்களில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com