முட்டை விலையில் மாற்றமில்லை
By DIN | Published On : 15th November 2023 03:45 AM | Last Updated : 15th November 2023 03:45 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.50-ஆக நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கலந்துரையாடப்பட்டது. விலையில் மாற்றம் செய்யாமல் தற்போதைய விலையே நீடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பண்ணைக் கொள்முதல் விலை மாற்றம் செய்யப்படாமல் ரூ. 5.50-ஆக நீடிக்கும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 84-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 93-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...