நவ. 24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 21st November 2023 02:59 AM | Last Updated : 21st November 2023 02:59 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக தெரிவித்தும், மனுக்களாகவும் அளித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...