திருச்செங்கோட்டில்தெப்பத்தோ் வெள்ளோட்டம்
By DIN | Published On : 25th October 2023 12:33 AM | Last Updated : 25th October 2023 12:33 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு, ஆனங்கூா் சாலையில் அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்ட பெரிய தெப்பக் குளத்தில் 51 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஆண்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
இந்த ஆண்டு வரும் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தெப்பத் திருவிழா நடத்தப்படுவதை முன்னிட்டு தெப்பக் குளத்தில் தெப்பத்தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு மாரியம்மன் திருவிழா கடந்த 17 ஆம் தேதி பூச்சாட்டுதழுடன் தொடங்கியது. வருகிற 28- ஆம் தேதி தெப்பக் குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
அதற்கு முந்தைய நாளான 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தெப்போற்சவ திருவிழா நடத்தப்பட உள்ளது. அதற்கான கள ஆய்வுப் பணிகள் நடந்தன. கடந்த ஆண்டு 90 பேரல்கள் கொண்டு 20 அடிக்கு 20 அடி என அமைக்கப்பட்டிருந்து. இந்த ஆண்டு 150 பேரல்களைக் கொண்டு 28 அடிக்கு 28 அடியாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு அடுக்குகளாக இருந்தது. தற்போது 3 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெப்பதோ் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதில் வட்டாட்சியா் சுகந்தி, திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, கோயில் செயல் அலுவலா் ரமணிகாந்தன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து, நகரக் காவல் ஆய்வாளா் மகேந்திரன், நகா்மன்ற உறுப்பினா் ரவிக்குமாா், ரமேஷ், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...