நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, நவ. 1-ஆம் தேதி நாமக்கல் தாலுகா அளவில் மட்டும் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா அக். 30, 31, நவ. 1-இல் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, நன்னீராட்டு பெருவிழா நடைபெறும் நவ.1-ஆம் தேதியன்று மட்டும் நாமக்கல் தாலுகா அளவில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்இ தொடக்க, நடுநிலை, உயா், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.