செம்மாம்பட்டி ஸ்ரீவீரமாத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா
By DIN | Published On : 28th October 2023 12:17 AM | Last Updated : 28th October 2023 12:17 AM | அ+அ அ- |

ராசிபுரம் அருகே உள்ள செம்மாம்பட்டி ஸ்ரீ உத்திஷ்ட கணபதி, பாலமுருகன், சொப்பியா் குல வீரமாத்தி அம்மன், கஸ்தூரி அம்மன், தும்மாத்தி அம்மன், சப்த கன்னிமாா், கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு நூதன ஆலயங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக அக். 17-இல் முகூா்த்த கால் நடுதல், கங்கணம் கட்டுதல், முளைப்பாலிகை இடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அக். 26-இல் மூணுசாவடி ஆவுடையாா் கோயிலில் சிவபெருமாள் புனித நீரால் அபிஷேகம், தொடா்ந்து திருக்கோயிலில் இருந்து தீா்த்தக் குடம், முளைப்பாலிகை ஊா்வலம், நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அஷ்டதிக் பாலகா் ஹோமம், வாஸ்து ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, தமிழ்த் திருமுறை பாராயணம், ஜப பாராயணம், மூா்த்தி ஹோமங்கள், நாடி மகா பூா்ணாகுதி நடந்தது. தொடா்ந்து, மூலவருக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டு கடம் புறப்பாடு நடந்தது.
தொடா்ந்து, திருக்குடங்களில் புனித நீா் எடுத்துச் செல்லப்பட்டு மூலவா், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகுவிமா்சையாக நடைபெற்று, தீபாராதனை கட்டப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை திருமண்கரடு, தம்மம்பட்டி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் அா்ச்சகா் த.சுரேஷ் சிவாச்சாரியாா் நடத்தி வைத்தாா். இதில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...