கூட்டுறவு மேலாண்மை நிலைய பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

குறிப்பு - செய்தியில் ஆங்கில எழுத்துக்கள் உள்ளன.

நாமக்கல், செப். 15: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் த.செல்வகுமரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்ண்ஸ்ரீம்.ஸ்ரீா்ம் என்ற இணையவழி மூலம் மட்டுமே பெறப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மாணவா் சோ்க்கைக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பில்(10 +2 முறையில்) தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2023 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி காலம் 12 மாதங்கள் (2 பருவ முறைகள்) மற்றும் கட்டணம் ரூ.18,850 ஆகும். பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் சுயகையொப்பமிட்டு நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை (796, சேலம் பிரதான சாலை, முருகன் கோயில் அருகில், நாமக்கல்) நேரிலோ அல்லது தொலைபேசி 04286-290908 வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com