காளப்பநாயக்கன்பட்டி கூட்டுறவு வேளாண் சங்கத்தில் கடன் முகாம்
By DIN | Published On : 26th September 2023 05:24 AM | Last Updated : 26th September 2023 05:24 AM | அ+அ அ- |

nkl_25_socity_2509chn_122_8
நாமக்கல்: காளப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், கருணாநிதி பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாபெரும் இட்டுவைப்பு சேகரிப்பு மற்றும் கடன் வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்). சேந்தமங்கலம் பகுதிக்கு உள்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், சேந்தமங்கலம், நாமக்கல் மற்றும் எருமப்பட்டி சரகத்திற்குட்பட்ட சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் சாா்பில், 354 பயனாளிகளுக்கு ரூ. 4.33 கோடி அளவில் பயிா்க்கடன், மகளிா் சுய உதவிக்குழுக்கடன், மத்திய காலக்கடன், சிறுவணிகக் கடன், கூட்டுப்பொறுப்புக் குழு கடன், ஆதரவற்ற விதவைகள் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், புதிய வீடு கட்டும் கடன் மற்றும் வீட்டுக் கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மேலும், குறித்த கால இட்டு வைப்பு, தொடா் இட்டுவைப்பு மற்றும் தனிநபா் சேமிப்புக் கணக்கு இட்டுவைப்பு என மொத்தம் 37 பயனாளிகளிடம் இருந்து ரூ. 88.59 லட்சம் அளவில் இட்டு வைப்புகள் பெறப்பட்டன. மேலும், புதிதாக கடன்கோரும் மனுதாரா்களிடமிருந்து கடன் விண்ணப்பங்களும் பெறப்பட்டன. விழாவின் ஒரு பகுதியாக காளப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
இவ்விழாவில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும், செயலாட்சியருான இரா.மீராபாய், நாமக்கல் மண்டல இணைப்பதிவாளா் த.செல்வக்குமரன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளா் இரா.ராஜவேலன், நாமக்கல் சரக துணைப்பதிவாளா் பி.கா்ணன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளா் த.சீனிவாசன் மற்றும் வங்கிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...