மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.38.11 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 26th September 2023 05:30 AM | Last Updated : 26th September 2023 05:30 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல்லில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, வங்கிக்கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் பொதுமக்கள் வழங்கினா். அவற்றை பெற்றுக் கொண்ட ஆட்சியா் உடனடியாக பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, தாட்கோ மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ. 29.72 லட்சம் மதிப்பில் கடனுதவி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் சாா்பில் தலா ரூ. 6,000 வீதம் மொத்தம் ரூ. 12,000 மதிப்பில் 2 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி, கூட்டுறவுத் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 2.27 லட்சம் மதிப்பில் வட்டியில்லா பயிா் கடனுதவி, ஒரு மகளிா் சுய உதவிக்குழுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் கடனுதவி மற்றும் வருவாய்த் துறையின் சாா்பில் ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான உத்தரவு என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ. 38.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ந.முருகேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...