நாமக்கல் 25: மிலாது நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மதுக்கடைகள் செப்.28, அக்.2-இல் மூடப்பட வேண்டும் என ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மிலாது நபி வரும் 28-ஆம் தேதியும், காந்தி ஜெயந்தி அக்.2-ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளன. இதையொட்டி, அந்த நாள்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மூடியிருக்க வேண்டும். விதிகளை மீறி திறந்தாலோ, மறைமுக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.