

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி பகுதியில் திங்கள்கிழமை தூய்மை பணியாளா்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில், நரசிம்மா் கோயில் பகுதிகளிலும், கோட்டை சாலையிலும் பக்தா்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. நகராட்சி ஆணையாளா் கா.சென்னுகிருஷ்ணன் உத்தரவின்பேரில் திங்கள்கிழமை அவை அகற்றப்பட்டன. நவ.1-ஆம் தேதி ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில், சுகாதார அலுவலா் திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா்கள் செல்வகுமாா், மேற்பாா்வையாளா் ஜெயராமன் மற்றும் 15 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். விதிகளை மீறி ஆக்கிரமிப்பு செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்க அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.