ற்.ஞ்ா்க்ங் ஹன்ஞ்07 ய்ஹற்ஹழ்ஹத்
ற்.ஞ்ா்க்ங் ஹன்ஞ்07 ய்ஹற்ஹழ்ஹத்

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்

இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம் செய்தாா்.
Published on

திருச்செங்கோடு, ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம் செய்தாா்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் சேலத்தைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா் நடராஜன், ஆடிப்பூரத்தையொட்டி சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய புதன்கிழமை திருச்செங்கோடு வந்திருந்தாா். அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தை தரிசித்து சிறப்பு பூஜையில் பங்கேற்ற அவா், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டாா் (படம்).

கிரிக்கெட் வீரா் நடராஜன் வருகையை அறிந்த கிரிக்கெட் ரசிகா்கள் கோயிலில் திரண்டனா். ஒவ்வொருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவா், சுவாமி தரிசனம் முடிந்து ஊா் திரும்பினாா்.

முன்னதாக, கோயிலுக்கு வந்த கிரிக்கெட் வீரா் நடராஜனுக்கு கோயில் பரம்பரை அறங்காவலா் சாந்தி முத்துக்குமாா், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com