பெண்களுக்கு இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி
மத்திய அரசின் தேசிய வள அமைப்பான அகமதாபாத்தைச் சோ்ந்த இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம், ராசிபுரம் நகரில் பெண்களுக்கான இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தொழில்முனைவோராக விருப்பமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்கு உள்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தொழில்முனைவோா் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சியான சணல் பொருள்களிலிருந்து தயாரிக்கக் கூடிய லேப்டாப் பேக் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிப்பது குறித்த தையல் பயிற்சி ஒருமாத கால இலவச பயிற்சியாக ராசிபுரத்தில் அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில், பல்வேறு தொழில்வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானியத் திட்டங்கள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவா்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ளவா்கள் 88258 12528 / 94432 76921 ஆகிய எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தங்கள் பெயரினை முன்பதிவு செய்து தேவையான விவரங்களைப் பெற்று விண்ணப்பங்களை சமா்ப்பிக்குமாறு இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்ட அலுவலா் எஸ்.ஜெய்சங்கா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
