மின்சாரம் பாய்ந்து வெளிமாநில இளைஞா் பலி

திருச்செங்கோட்டை அடுத்த வெப்படையில் மின்சாரம் பாய்ந்து வெளிமாநில இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டை அடுத்த வெப்படையில் மின்சாரம் பாய்ந்து வெளிமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த மபூஜ் சேக் (22) பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில் தங்கி தோட்டத்துக்கு மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், வெப்படையை அடுத்த அருவங்காடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சனிக்கிழமை மாலை மருந்து அடித்து கொண்டிருந்தாா்.

அப்போது அங்கிருந்த லாரி மேலே ஏறியுள்ளாா். அப்போது மேலே சென்ற மின் ஒயா் உரசியதில் மபூஜ் சேக்கை மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். வெப்படை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com