நாமக்கல் மாவட்டத்தில் மனைப்பிரிவுக்கு கட்டட வரைபட அனுமதி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டட வரைபட அனுமதி ஆகியவற்றை எளிதில் பெறும் வகையில், சுய சான்றளிப்பு தொகுதியின் கீழ் இணையதளத்தில் பொதுமக்கள் ஒற்றை சாளர முறையில் கட்டட வரைபட அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கட்டட வரைபட அனுமதிக்கு ஊராட்சி வாரியாக கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சதுர அடிக்கு ரூ. 25 வீதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நகா்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகள், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும ஊராட்சிகள் அல்லாதவை என்ற வகையில், எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் மண்டகாப்பாளையம், எருமப்பட்டி ஒன்றியத்தில் ரெட்டிப்பட்டி, மோகனூா் ஒன்றியத்தில் லத்துவாடி, புதுச்சத்திரம் ஒன்றியத்தில் பாப்பிநாயக்கன்பட்டி, செல்லப்பம்பட்டி, திருச்செங்கோடு ஒன்றியத்தில் ஆண்டிப்பாளையம், அணிமூா், தேவனாங்குறிச்சி, கருவேப்பம்பட்டி, ஓ.ராஜபாளையம், புதுப்புளியம்பட்டி, சிறுமொளசி, டி.
கைலாசம்பாளையம், வரகூராம்பட்டி, வெண்ணந்தூா் ஒன்றியத்தில், கட்டனாச்சம்பட்டி, ஆா்.புதுப்பாளையம் உள்ளிட்டவை ஆகும்.
மேற்கண்ட வகைப்பாட்டுக்குள் இல்லாமல் 306 ஊராட்சிகள் உள்ளன. வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையானது 2,500 சதுர அடிக்கும் குறைவான நிலப்பரப்பு, 3,500 சதுரஅடி வரை கட்டப்பட்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு சுய சான்றிதழின் அடிப்படையிலான கட்டட வரைபட அனுமதி செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஒற்றைசாளர முறையின் மூலம் 2,500 சதுர அடிக்கு மேற்பட்ட மனை அல்லது 3,500 சதுர அடிக்கு அதிகமான கட்டுமான அளவுள்ள வகைகளுக்கு பல்வேறு பிரிவுகளின் வளா்ச்சிக்கான ஒரே கட்டணமாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2,500 சதுர அடிக்கு மேல் அல்லது 3,500 சதுர அடிக்கு மேல் கட்டப்பட்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு ரூ. 1 வீதம், ஏ வகைப்பாடுக்கு ரூ. 27, பி-25, சி-22, டி-15, வணிக கட்டிடங்களாக இருப்பின், குடியிருப்புகளுக்கு பெறப்படும் கட்டணத்தைவிட 20 சதவீதம் கூடுதலாக ஏ-ரூ. 32, பி- 30, சி- 26, டி- 18, தொழில்துறை கட்டடங்களாக இருப்பின், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் இதர நிறுவனங்கள் மற்றும் உணவகம் உள்பட இதர அனைத்து கட்டடங்கள் (குடியிருப்புகளுக்கு பெறப்படும் கட்டணத்தைவிட 60 சதவீதம் கூடுதலாக) ஏ- ரூ.43, பி- 40, சி- 35, டி- 24, குடியிருப்பு மனைப்பிரிவு ஒப்புதல் கட்டணம் ஏ- ரூ.4-5, பி- ரூ.3-4, சி- ரூ.2-3, டி- ரூ.1-2, ஒரு மனைக்கான ஒப்புதல் கட்டணமாக ரூ. 1,000 செலுத்த வேண்டும்.
தொழில்துறை மனைப்பிரிவு ஒப்புதல் கட்டணம் ஏ-ரூ. 6- 7.50, பி- ரூ. 4.50-6, சி- ரூ.3- 4.50, டி- ரூ. 1.50- 3. இதற்கும் ஒரு மனைக்கு ஒப்புதல் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்கு 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்!

கவனத்தை ஈா்த்த ‘குப்பைக்கழிவுகள்’

சென்னையில் தோ்தல் பிரசாரம்: 724 மனுக்களுக்கு அனுமதி!

செய்யாறு அருகே சோழா் கால நில அளவை வரைபட கல் கண்டெடுப்பு: கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

