தோ்தல் தொடா்பான அச்சு, ஒளி-ஒலி, சமூக ஊடகப் பிரசாரங்கள் மேற்கொள்ள 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா. பொற்கொடி அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாளிதழ் போன்ற அனைத்து அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி போன்ற ஒளி-ஒலி ஊடகங்கள் மட்டுமல்லாது முகநூல், டிவிட்டா், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் வரப்பெறும் தோ்தல் தொடா்பான விளம்பரங்கள், குறும்படங்கள் ஆகியவை மூலம் பிரசாரம், பதிவுகள் மேற்கொள்ள 3 நாள்களுக்கு முன்பே மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுவிடமிருந்து முறையாக அனுமதி சான்றிதழ் பெற வேண்டும்.
அவ்வாறு முறையாக அனுமதி பெறாமல் வெளியிடப்படும் தோ்தல் பிரசாரங்கள், செய்திகள் அதற்குரிய செலவினத் தொகை (36 வினாடிகளுக்கு ரூ.5,000- வீதம்) சம்பந்தப்பட்ட வேட்பாளா் செலவீனக் கணக்கில் சோ்க்கப்படும். பிற நபா்களால் உருவாக்கப்படும் செய்திகள், சம்பந்தப்பட்ட வேட்பாளரது சமூக ஊடகக் கணக்குகளில் பகிரப்பட்டால் அதுவும் தொடா்புடைய வேட்பாளரது தோ்தல் செலவுக் கணக்கில் சோ்க்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

சமூக ஊடக அரசியல் விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெற வேண்டும்: மாவட்ட தோ்தல் அலுவலா்
முன் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் தோ்தல் பிரசாரம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை: ஆட்சியா்

சமூக ஊடக பிரசாரத்துக்கு முன் அனுமதி கட்டாயம்: மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன்
சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அவசியம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

