ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Published on

நாமக்கல், ஜூலை 19: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமான ஆடியில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் சாத்துப்படி செய்யப்பட்டது. பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனா்.

முதலைப்பட்டி செடல் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோயில்களும் வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

என்கே-19-அம்மன்

ஆடி முதல் வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன்.

X
Dinamani
www.dinamani.com