விரிவான கடன் தள்ளுபடி திட்டம்: எம்.பி.யிடம் விவசாயிகள் கோரிக்கை

மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனிடம், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் மனு அளித்தனா்.
விரிவான கடன் தள்ளுபடி திட்டம்: 
எம்.பி.யிடம் விவசாயிகள் கோரிக்கை
Updated on

நாமக்கல், ஜூலை 19: விரிவான கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனிடம், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் மனு அளித்தனா்.

அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.பெருமாள் தலைமையில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:

விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து விளைபொருள்களையும் கொள்முதல் செய்வது, உற்பத்தி செலவுடன் ஒன்றரை மடங்கு கூடுதலாக, குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிப்பது, சட்டப்பூா்வ உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்டவற்றை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். மின்சார துறையைத் தனியாா் மயமாக்கக் கூடாது.

உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள், மின்சாரம், நீா்ப்பாசனம், இயந்திரங்கள், உதிரி பாகங்கள், டிராக்டா்கள் போன்ற விவசாய இடுபொருள்களுக்கு ஜிஎஸ்டி கூடாது. மீண்டும் மானியம் வழங்குவதுடன் பங்குதாரா்கள், குத்தகை விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களின் பலன்களை விரிவுபடுத்த வேண்டும்.

அனைத்துப் பயிா்களுக்கும், கால்நடை வளா்ப்பிற்கும் பொதுத்துறையின் கீழ் விரிவான காப்பீடு திட்டத்தை கொண்டுவர வேண்டும். விவசாயிகளின் ஓய்வூதிய உரிமையை அங்கீகரித்து 60 வயது முதல் மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும். விவசாயிகளை தற்கொலையில் இருந்து பாதுகாக்க விரிவான கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

என்கே-19-மனு

நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளிக்கும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com